Thursday, December 31, 2015

மரம் நடு

மரம் நடு
காட்டு விலங்குகள் நாட்டில் வந்தால்
பிரச்சினை ஏதுமில்லை,
கடல் அலைகள் நாட்டில் வந்தால்
வாழ வழியேதுமில்லை.

Sunday, December 13, 2015

கடல்

கிட்டத்தட்ட முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னாள் கப்பல் போக்குவரத்து கொஞ்சம் பரவலாக இருந்த நேரம்.

Wednesday, April 10, 2013

அம்மா...


ஆயிரம் கோடி பெண்கள் இருக்கலாம்
அதில் ஒரு பெண்ணாய்
அன்பின் உருவாய்
என்னை சுமந்த கருவாய்

பாலின் வடிவில் அன்பை அளித்தாய்
விரலை பிடித்தேன் நடக்க
வைத்தாய்,
வாயைத் திறந்தேன் பேச
வைத்தாய்,
அம்மா என்றேன் பள்ளியில்
சேர்த்து அதை எழுத
வைத்தாய்,!
நீ தந்த அறிவினால்
எழுதுகிறேன்
இன்று உன்னைப் பற்றி......


ஆசைப்பட்டேன்
கண்ணைத் திறந்து உன்னை
முதலில் பார்த்தது போல
கண்ணை மூடும் போதும்
உந்தன் அன்பு முகத்தை
பார்த்துக் கொண்டே
மூட வேண்டும்.....

ஏனென்றால்
கோடியில் ஒருவள்
அம்மா....... ... நீ !
மனதில் கட்டியுள்ளேன்
உன்னைக் கடவுளாய்
வைத்து
ஒரு கோவில்........
-அலோசா...