Wednesday, December 21, 2011

ஆசிரியர்...

உம்மில் போட்ட விதையை
வேருன்றி
வளரச் செய்தாய்
பூமித்தாயை போல
எங்களை...

நாங்கள் வாழ
நீரென்ற கல்வியையும்
அறிவுரை என்ற காற்றையும்
தந்து
ஆலமரமாய் வளரச்
செய்து
உணவிற்கு
சூரியனாய்
ஒளிதந்து
எங்கள் வாழ்வின்
கலங்கரை விளக்கமாய்
விளங்குகிறாய்...............

மனிதன் பரிணமித்ததோ
குரங்கிலிருந்து
என்னே அதிசயம்...!
தெய்வத்தின் பரிணாமமாய்
நீ...!

 மழையின் போது
இடியும் , மின்னலும் போல
உந்தன் அறிவுரையின் போது
அடியும் , உதையும்
நன்மைக்கே
அது வெள்ளதிலிருந்து  பாதுகாக்க
இது நல்வழியில் தவறாமல் நாங்கள் இருக்க...

நீ என்ன அதிசயச் சிற்பியோ
உன்னிடம் கல்லாய்
வந்த என்னை
அறிவுச்  சிற்பமாய் மாற்றியமைக்கு

இதெல்லாம்   என்ன ?

உம்மிடம் மண்ணாய்
வந்த எம்மை
அனைவருக்கும் பயன்படும்
அழகிய பாத்திரமாய்
மாற்றியதை விடவா ..!!!

வழிகாட்டியற்ற
கரும்பலகை போன்ற
எந்தன் வாழ்வில்
சுன்னக்கட்டியால்
சுறுசுறுப்பாக
ஏதோ செய்தாய்
உற்று நோக்கினேன்
அடடா !!!
          இது என் வாழ்க்கை பாதை
          என உணர்ந்தேன்...

சில ஆண்டுகளின் உந்தன்
அறிவுரை
பல ஆண்டுகள்
எந்தன்
வாழ்க்கை பாதையாய்
அமைந்ததற்கு  நன்றி.....!

உந்தன் அறிவுரை
எந்தன் வாழ்வில்
வெற்றிகளாய்
விண்மீன் போல
மின்னுகின்றன...

மாதாவும், பிதாவும்
குருவே எனப் போற்றத்தக்க
உந்தன் புகழ்
உலகம் அழிந்தாலும்
உயரத்தில் நிற்கும்.....

No comments:

Post a Comment